Subscribe Us

சிந்தனைமிக்க தலைவரே இன்று முஸ்லிம் சமூகத்திற்குத் தேவை : பஷீர் சேகுதாவூத் அதிரடி

ஜே.எம்.ஹபீஸ்


சிந்தனைமிக்க தலைவரே இன்று முஸ்லிம் சமூகத்திற்குத் தேவை என ஊக்குவிப்பு திறன் அமைச்சரும் ஸ்ரீலங்கத முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
உணர்ச்சிபூர்வமான தலைமைத்துவம் என்பது இந்தக் கட்டத்திலே முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுவது எந்தவிதப் பொருத்தமும் அற்றது என்பது என்னுடைய அபிப்பிராயம் என அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்;ந்து உரையாற்றிய அவர்,
நெருக்கடியான சூழலை எதிர்கொள்வதற்கு நாங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களோடு கைகோர்த்துத்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையான யதார்த்தை நாங்கள் புறந்தள்ள முடியாத சூழலிலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து வன்முறையற்ற புரிந்துணர்வுடைய, சகிப்பத்தன்மையுடைய ஒரு இலங்கைச் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு பாடுபட முடியாது என்ற கேள்வியைக் நான் இங்கு கேட்டு அதற்குரிய பதிலாக முஸ்லிம்களுக்கு வை.எம்.எம்.ஏ இருப்பதைப் போல பௌத்தர்களுக்கு வை.எம்.பி.ஏ இருக்கிறது.
இந்துக்களுக்கு வை.எம்.எச்.ஏ இருக்கிறது. கிறிஸ்வர்களுக்கு வை.எம்.சீ.ஏ இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தூபமிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுடன் கலந்துரையாடி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இந்தத் தருணத்தில் எமக்காக ஒரு கடமை இருக்கின்றது.

அந்தக் கடமை என்னவென்றுதான் கேள்வி. இன்று இந்த சமூகத்திற்குத் தேவைப்பட்டது. சிந்தனைமிக்கத் தலைவர் சிந்தனாபூர்வமான தலைமைத்துவம் தான் இன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உணர்ச்சிபூர்வமான தலைமைத்துவம் என்பது இந்தக் கட்டத்திலே முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுவது எந்தவிதப் பொருத்தமும் அற்றது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்நாட்டிலே இருக்கின்ற அரசியல் தலைமைகள் ஒரு கூட்டுமொத்த சிந்தனைக்கு வர வேண்டும். அரசியல் என்று வரும்போது சமுதாயத்தின் அரசியலையும் இந்நாட்டின் தேசிய அரசியலையும் ஒருங்கிணைத்துப் பார்த்து வடிவமைத்து இந்தக் காலத்திலே வெளிக்காட்ட வேண்டும்.

தனியே முஸ்லிம்கள் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் தனியாக தனியொரு சமுதாயமாக நின்று முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அதற்கான வரலாறும் கிடையாது. ஜனாதிபதி நினைக்கக் கூடாது இந்த வன்முறை மூலமாக நாங்கள் இழப்பது முஸ்லிம்களுடையுதும் சிறுபான்மையின மக்களுடைய வாக்குகள் மட்டும் தான் என்று.

பொதுபலசேன, ராவய பலய போன்ற தீவிரவாத பௌத்த இயக்கங்களை போன்ற 90 வீததமான பௌத்த மக்களுடைய வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ இழக்கின்ற அபாயம் இருக்கின்றது என்பதை நான் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதனால் தான் முஸ்லிம்கள் சமூகத்தை தனியாக இயங்குவதை விடுத்து அந்த பௌத்த மக்களோடு இயங்குவதற்கு அடையாளப்படுத்துவதற்கு உண்மையான சமாதானத்தோடு வாழ விரும்புகின்ற மக்களோடு முஸ்லிம் சமூகத்தை கூட்டிணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என்றார்.
நன்றி: மடவல நியுஸ்

Post a Comment

0 Comments