பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள்
தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அளுத்கம
– பேருவளை மற்றும் வெலிபன்ன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 15 பொலிஸ் குழுக்கள்
நியமிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு
குற்றத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் ஐந்து குழுக்கள் ஏற்கனவே
விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் மேலும் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


0 Comments