Subscribe Us

header ads

பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!

மே 26 இல் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி அவ்விழாவுக்கு
 வருகை தருமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பூட்டான் பிரதமர் ஸ்ரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலைதீவுகள் அதிபர் அப்துல்லா யாமின் ஆகிய சார்க் நாடுகளின் தலைவர்களுக்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்அழைப்பு பற்றி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த போது இது வரவேற்க்கத் தக்கதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சார்க் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments