Subscribe Us

header ads

டினேஷ் சந்திமல் இன்றைய போட்டியில் இருந்து நீக்கம்

இலங்கை அணியின் இருபதுக்கு -20 போட்டிகளுக்கான தலைவர் டினேஷ்
சந்திமல் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
முதலாலது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை  நடத்தவுள்ளன.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அணியே இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதாக அணியின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இன்றைய போட்டியில் லசித் மலிங்க அணியின் தலைமையை வாகிப்பார்.
இன்றைய ஆடுகளைத்தை பரிசீலித்த பின்னர் அணியில் மாற்றங்கள் ஏற்படலாம் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments