பிரித்தானியாவைச் சேர்ந்த பிறப்பிலேயே செவிப்புலனற்று பிறந்தபெண்ணொருவர்
செயற்கை நத்தைச் சுருளி உபகரணத்தின் மூலம் முதல் தடவையாக கடந்த வாரம்
கேட்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.
ஜோன்னி மில்னி (39 வயது) முதன் முதலாக ஒலியைக் கேட்ட போது அவர் உணர்வு
மேலீட்டால் கண்ணீர் சிந்தி அழுவதை வெளிப்படுத்தும் வீடியோ படம்
வெளியிடப்பட்டுள்ளது.
முதன் முதலாக ஒலியைக் கேட்ட போது எவ்வாறு இருந்தது என ஜோன்னி தனக்குரிய
மொழி நடையில் விபரிக்கையில், தன்னால் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு
சொல்லையும் தன்னால் கேட்க முடிந்த போது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை
விபரிக்க முடியாதிருந்ததாகவும், தனது உணர்வு மேலீட்டால் சத்தமிட்டு அழ
ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார். தான் அழுவதைப் பார்த்து தனது தாயாரும்
அழுததாக அவர் கூறினார்.
நான் இதை கற்பனை செய்து பார்த்திருக்கவில்லை. அது மிகவும் அற்புதமாக
இருந்தது. நான் ஒவ்வொரு கனத்தையும் வாழ்ந்து பார்க்க விரும்பினேன். இது
தான் ஒலி என்பது என எனது மூளையில் சிறிய குரலொன்று கூறுவது போல் இருந்தது.
இந்நிலையில் இரைச்சல் மிக்க சூழலுக்கு மெதுவாக தன்னைப் பழக்கப்படுத்தி
வருவதாக அவர் கூறினார்.

0 Comments