Subscribe Us

header ads

நீங்கள் புத்தளத்தில் ஹீரோவாக / கதாநாயகனாக மாற வேண்டுமா?

(Zakir Arafath S.V)

அரசியல், இயக்கம், மதம், மொழி பேதமின்றி ஒரு பொதுவான தொண்டர் குழுவாக இயங்கி வரும் நமது தொண்டர் குழுவின் முக்கியமான நோக்கம் ஒன்றினை உங்களுடன் மிக நீண்ட நாளைக்கு பின் நமது அங்கத்தவர்களின் அனுமதியோடு பகிர்ந்துகொள்கிறோம்.

பொதுவாக நாம் பாடசாலைக் காலத்தில் பாடசாலை கல்வியை எப்படியோ முடித்துவிட்டு வெளியாகி வரும் நமது சகோதரர்கள் அவர்களுடைய பரீட்சை முடிவுகள் வரும் வரைக்கும் சும்மா இருப்பது வழமை. 

அந்த நேரத்தில் பலர் பல விடயங்களை தமது பொழுது போக்காக அமைத்துக் கொள்வார்கள். அது ஏன்? தொண்டர் சேவையாக இருக்க முடியாது என்று சிந்தித்த சிலரின் வெளிப்பாடே இந்த தொண்டர் குழு.

எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கும் நேரத்தில் ஒன்றாக கூடி சமுகத்தில் இவர்களால் எதை இலவசமாக செய்ய முடியும் என்று கலந்துரையாடி, ஒரு முடிவை எடுத்து அதற்கு அழகாக திட்டம் வகுத்து. அவற்றை யாரென்றே தெரியாத சிலருக்கு இலவசமாக கொடுப்பதன் மூலம் பெரிய ஒரு திருப்தியை இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த நேரத்தில் இவர்கள் பல விடயங்களை படித்துக் கொள்கிறார்கள்.
A. புதிய நபர்களை தெரிந்து கொள்கிறார்கள்
B. புதிய விடயங்களை முயற்சி செய்கிறார்கள்
C. அவர்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்
D. திறமையை வெளிப்படுத்த தாமாகவே சந்தர்ப்பங்களை அமைக்கின்றார்கள் 
E. பெரிய பொறுப்புக்களை சுமப்பதட்கான அனுபவங்களை பெறுகிறார்கள்
F. பிறரின் கஷ்டத்தினை அவர்களின் பக்கமிருந்து பார்க்கிறார்கள்.
G. அவர்களின் உதவி எந்த அளவு பிறரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திகிறது என்பதை உணர்கிறார்கள்?
H. ஒரு மனிதனாக அவர்கள் சுமக்கும் பொறுப்பை உணர்கிறார்கள்.
J. உதவி செய்யும் போது விளையாட்டாகவும் கேலியாகவும் வேலைகளை பிரயோசனமாக செய்கிறார்கள்.

இப்படி பல பிரயோசங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படி பல பிரயோசங்களை பெற்றுக்கொள்ள களம் அமைத்துக்கொள்ளும் இந்த தொண்டர் குழு தற்போது உங்களிடம் ஒரு அன்புக் கரம் நீட்டி நிற்கிறது.

வெறுமனே ஒரு பொழுதுபோக்கினை தெரிவு செய்து சிரித்து சிரித்து நேரத்தை வீணடிக்கும் நமது சகோதர்கள். அவர்களது இலவச காலத்தில் நேரத்தில் தொண்டராக நம்மோடு இணைந்தால் அவர்களை சிலருக்கு ஹீரோவாக / கதாநாயகனாக மாறுவதற்கு நாம் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கிறோம்.

எம்மோடு பலர் தொண்டர்களாக இணைந்து இன்று அவர்கள் பலருக்கு உதவி செய்து ஹீரோவாக இன்று நமது சமுகத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவர்களது மேலதிக படிப்பை ஆரம்பிக்கும் போது அவர்களுக்குள் பல திறமைகள் குடிகொள்கிறது. அந்த திறமைகளை அவர்களின் படிப்பில் காட்டும் போது எல்லோர் மத்தியுலும் ஒரு சிறந்த நபராக மாறுகிறார்கள்.

உதாரணமாக: மேடையில் ஏறினாலே கூச்சம் என்று கூறிய சிலர் இந்த தோன்றல் குழுவில் இணைந்து இன்று அவர் படிக்கும் நிறுவனத்தில் எல்லோருக்கும் முன்னிலையில் ஆங்கிலத்தில் ஒரு அழகான presentation செய்து காட்டி பாராட்டு பெற்றிருக்கிறார். 

இதற்காக உருவாகிய இந்த அமைதி தொண்டர் குழு சுமார் பல மாதங்களாக நமது புத்தளத்தில் பல நிகழ்வுகளை சிறப்பாக செய்தும் சில தொண்டர் குழுக்களை உருவாக்கியும் இருக்கிறது. இவர்கள் 6 மாதத்தில் சுமார் 30 நிகழ்வுகளை செய்து இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இன்னும் செய்வார்கள்.

இதுவரைக்கும் நமது குழுவிற்கு நிதிவுதவி வழங்கிய எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு ஒரு சந்தோசமான விடயத்தையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம். 

நமது அமைதி தொண்டர் குழுவிற்கு இறைவனின் துணையோடு சில பெரிய மனம் படைத்தோர் நிரந்தர நிதி வழங்குனர்களாக கால்ம் முழுவதும் செயற்பட முன்வந்துள்ளார்கள். இவர்களின் துணையோடும் நமது தொண்டர்களின் துணையுடனும், அல்லாஹ்வின் துணையுடனும் நிச்சயம் இந்த குழு மேலும் நல்லவகையாக பயணிக்கும்.

உங்கள் நண்பர்களில் அல்லது உங்கள் பிள்ளைகளில் அல்லது உங்கள் மாணவர்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்தி அவர்களையும் எம்மோடு சேர்த்து வையுங்கள். அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து கூறுகிறோம் எமக்கு வேறு எந்த ஒரு மறைமுக நோக்கமும் இந்த குழுமத்தில் இல்லை.

தொண்டர்களாக இணைய விரும்புவோர் எமக்கு உங்கள் பெயர் தொலைபேசி இலக்கத்தை inbox பண்ணலாம்.

நன்றி | வஸ்ஸலாம்

Post a Comment

0 Comments