மக்காவில்
ஹரம் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் கடந்த ஆண்டைப் போலவே இந்த
ஆண்டும் வெளிநாட்டுப் புனிதப் பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட
கட்டுப்பாடுகள் தொடரும்.
ஹரமிலும்
புனிதத் தலங்களிலும் கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால் இந்த ஆண்டு ஹஜ்ஜுப்
பயணத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் 20% குறைக்க
வலியுறுத்தப்படும் என சவூதி ஹஜ் விவகார அமைச்சர் டாக்டர் பந்தர் ஹஜ்ஜார்
தெளிவுபடுத்தினார். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் 50% குறைக்கப்படும்.
துருக்கி
மத விவகார அமைச்சரும் ஹஜ் மிஷன் தலைவருமான பேராசிரியர் முஹம்மத் குமாஸுடன்
ஜித்தாவில் மேற்கொண்ட சந்திப்பின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஹரம்
விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் கடந்த ஆண்டு முதல் முறையாக பயணிகளின்
எண்ணிக்கையை சவூதி அரசாங்கம் குறைத்தது. ஹரம் விரிவாக்கப் பணிகள்
நிறைவடைந்தால் பல மடங்கு அதிகமாகப் பயணிகளுக்கு வாய்ப்பு கொடுக்க இயலும்
எனவும் அவர் தெரிவித்தார்.

0 Comments