அணிகளுக்கிடையான நடைபெற்ற ஆசியகிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளினால் பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டு 2014 ஆண்டுக்கான ஆசியக்கிண்ணத்தை சுவிகரித்தது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி
துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50
ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில்
அதிகபட்ச ஓட்டங்களாக பவாத் அலம் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களையும் மிஸ்பாஹ்,
உமர் அக்மல் ஆகியோர் முறையே 65, 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மற்ற
வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46.2
ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. திரிமான்னேவின்
சதத்தின் உதவியுடனும் மஹேல, குசால் பெரேரா ஆகியோரின் வலுவான
துடுப்பாட்டத்தின் உதவியுடனும் வெற்றியை தமதாக்கினர்.
பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக மலிங்க 5
விக்கட்டுகளையும், பாகிஸ்தான் அணி சார்பாக சயீத் அஜ்மல் 3
விக்கட்டுகளையும், ஜுனைத் கான், தல்கா ஆகியோர் தலா ஒரு விக்கட்டினையும்
கைப்பற்றினர்.
நடைபெற்று முடிந்த ஆசியக்கிண்ண தொடரில் இலங்கை அணி எந்த போட்டியிலும் தோல்வியுறாது கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடதக்கது.


0 Comments