Subscribe Us

header ads

சோச்சி ஒலிம்பிக்கில் ரஷ்யாவை உலுக்கிய விண்கல்லின் பாகத்தினை பதக்கமாக வழங்க ஏற்பாடு

எதிர்வரும் 7 ஆம் திகதி ரஷ்யாவின் சோச்சி நகரில் ஆரம்பமாகவுள்ள 2014 குளிர்கால ஒலிம்பிக்கில் அந்நாட்டினை உலுக்கிய விண்கல்லின் பாகத்தினை பதக்கமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் யுரல் பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அதிசக்தி வாய்ந்த விண்கல் வீழ்ந்ததில் சுமார் 1,200 பேர் வரையில் காயமடைந்தனர். 5 இலட்சம் தொன் டி.என்.டி சக்தி வாய்ந்த இந்த விண்கல்லின் 5 அடி விட்டமுடைய பாகம் ஒன்று செபார்குல் எனும் ஐஸ் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட கல்லினாலான பதக்கங்களே ஒலிம்பிக் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. விண்கல் வெடிப்புச் சம்பவம் நடைபெற்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.  இதனை முன்னிட்டு அன்றைய தினத்திலே (2014.02.15) இந்த விண்கல் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

சோச்சி ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் தங்கப்பதக்க நட்சந்திரங்கள் 10 பேருக்கே மேலதிகமாக விசேடமாக வடிவமைக்கப்பட்ட விண்கல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் 40 பேருக்கு விண்கல் பதக்கங்களை விற்பதற்கும் ஏற்படுபாடு செய்யப்பட்டுள்ளதாம்.

விண்கற்கள் விலைமதிப்புமிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments