Subscribe Us

header ads

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பேஸ்புக் பாவனை 80 வீதத்தால் குறையும்!

பேஸ்புக் பாவனை 80 வீதத்தால் குறையும், ஆய்வில் தகவல்
சமூக வலைத்தளத்தில் வல்லரசனான “பேஸ்புக்” தனது 10ஆவது ஆண்டு நிறைவை நேற்று கொண்டாடியது.
 
அசுர வேகத்தில் வளர்ந்து வரும், பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடுத்த 3 வருடங்களில் 80 சதவீதம் குறைந்துவிடுமென பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ட்விட்டர், மெசஞ்சர், ஸ்கைப், வைபர் போன்ற சமூக வளைத்தளங்களின் வளர்ச்சி பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.
 
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஷக்கர்பர்க் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹாவாட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
 
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
 
இப்போது பேஸ்புக் கணக்குகளின் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டிவிட்டது.
 
இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை என்கிறார் மார்க் ஷக்கர்பர்க்.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலர்கள். 2013ஆம் ஆண்டில் அதன் வருவாய் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments