Subscribe Us

header ads

அமெ. உயரதிகாரிக்கு விஸா மறுக்கவில்லை

உயர்மட்ட அமெரிக்க உத்தியோகத்தரான கதரின் ரஸலுக்கு விஸா மறுக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு  மறுத்துள்ளது.

இப்படியான செய்திகள் சோடிக்கப்பட்டவை எனவும் சரியானவை அல்லவெனவும் அமைச்சு கூறியுள்ளது.

இந்த செய்திகள் முழுதாக பிழையானவை ரஸலுக்கு விஸா மறுக்கப்படுவதற்கான காரணம் எதுவும் இருக்கவில்லை அவரது விஜயத்துக்கான நாட்களை மீளமைக்க வேண்டியிருந்தது இல்லாதுவிடின் சந்திக்க வேண்டியவர்களில் சிலரை சந்திக்க முடியாமல் போயிருக்கும் இவை சாதாரனமாக நடக்கும் விடயங்களே அவரது விஜயத்துக்கான கால அட்டவணையை மாற்றியமைக்கும்படி மட்டுமே நாம் கேட்டோம் என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பிரபாஷினி பொன்னம்பெரம கூறினார்.

பெண்கள் பிரச்சினைகளுக்கான அமெரிக்க தூதுவர் கதிரின் ரஸலுக்கு இலங்கை அரசாங்கம் விஸா வழங்க மறுத்து விட்டதாகவும் இதனால் அவரது ஒரு மாதகால உயர்மட்ட விஜயத்தை அவர் இரத்துச் செய்யவேண்டியிருந்தது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Post a Comment

0 Comments