தென் மாகாண சபை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய
தேசிய கட்சியின் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தேர்ட்டை ருஹூணு மாகம்புர நிர்வாகக் கட்டிடத் தொகுதியிலுள்ள அம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சீ.த.சொய்சாவிடம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைமை வேட்பாளர்களினால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்புமனுவினை தாக்கல் செய்ய அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வருகை தந்திருந்தார். எனினும் அவர் உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தெரிவத்தாட்சி அலுவலருடன் தொடர்புகொண்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளரினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னனி மற்றும் நாட்டுப்பற்றுள்ள சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
அத்துடன் சுயேட்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவடைகின்ற நிலையில் மூன்று சுயேட்சை குழுக்கள் மாத்திரமே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments