இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பருப்பிற்கான விசேட வியாபார பண்ட அறவீடு
17 ரூபாவினால் இன்று நள்ளிவரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது என நிதி மற்றும்
திட்டமிடல் அமைச்சு தெரிவித்தது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைய நுகர்வோருக்கு சலுகை வழங்கும் வகையில் இந்த அறவீடு குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் 22 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பிற்கான விசேட வியாபார பண்ட அறவீடு தற்போது 5 ரூபாவாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அத்தியவசிய பொருட்களுக்கான விசேட வியாபார பண்ட அறவீட்டில் அரசாங்கம் காலத்திற்கு காலம் மாற்றங்களை மேற்கொள்ளும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.

0 Comments