“உலகம்
முழுவதும் தாய்நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு ஒன்றுகூடுவோம்” என்ற தொனிப் பொருளில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின வைபவத்தை புத்தளம் மக்களும் சிறப்பாக கொண்டாடினர்.
புத்தளம் வரலாற்றில் இலங்கையின்
66 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின
கொண்டாட்டங்களை விடவும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்வைபவங்களின் பிரதான வைபவங்கள் புத்தளம் கொழும்பு முகத்திடலில்
நடைபெற்றது.
இச்சுதந்திர தின விழா ஏற்பாடுகளை
புத்தளம் நகர பிதாவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி
பிரதான அமைப்பாளருமான கௌரவ கே.ஏ.பாயிஸ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில்
ஏற்பாடு செய்திருந்ததோடு பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய கொடியையும்
ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் மதகுருமார் ,வடமேல்
மாகாண சபை உறுப்பினர் கௌரவ என்.டி.எம்.தாஹிர், நகர சபை உறுப்பினர்கள்,
புத்தளம் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.ஆர்.எம்.மலிக் ,புத்தளம் வலயக் கல்விப்
பணிமனையின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜனாப் இஸட்.ஏ.ஸன்ஹீர், பொலிஸ் நிலைய
அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் ,அரச ஊழியர்கள் பொது மக்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ஊர்வலமும் புத்தளம் நகர பிரதான வீதிகளில் வலம் வந்தன. சுதந்திர
தின விழாவுக்கான அனுசரனையை புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச
செயலகம், புத்தளம் பொலிஸ் நிலையம், புத்தளம் தள வைத்திய சாலை, புத்தளம்
வலயக் கல்விப் பணிமனை என்பன வழங்கியிருந்தன.
நன்றி: வசீம் அகரம்
நன்றி:Puttalam Online
Fotos:M.H.Hasni Ahmed (Puttalam Online)

0 Comments