Subscribe Us

header ads

முதல்வரின் பெண்மணிக்கு தேர்தலில் வாய்ப்பில்லை


கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் பாரியார் பெரோஸா முஸம்மிலுக்கு மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் நேர்மூகத் தேர்வில் பெரோஸா முஸம்மில் கலந்துகொண்டிருந்தார். தனது மனைவி மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் பெரோஸா மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை தொடர்புகொண்டு வினவியபோது,

"எனது மனைவி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்;ப்பு வழங்கப்படும் என நம்புகின்றேன். எனினும் இதுவரை இறுதி முடிவு கிடைக்கவில்லை. 'எனினும் எனது மனைவி போட்டியிடுவதற்கு கட்சியிலுள்ள சில முக்கியஸ்தர்கள் கட்சி தலைவரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்றார்.

இதேவேளை, மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கியுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, சிரச வானொலியின் முன்னாள் முகாமையாளர் எஸ்.எம்.மரைக்கார், தெஹிவளை மாநகர சபை உறுப்பினர் மரீனா ஆப்தீன் மற்றும் அக்ரம் பவுண்டேஷனின் பணிப்பாளர் முகம்மட் அக்ரம் ஆகியோரே ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ளனர்.

இன்று நண்பகல் வரை இவர்கள் அனைவரும் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, புதிய சிஹல உருமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்

Post a Comment

0 Comments