இலங்கை பற்றி வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக இலங்கை அரசாங்கம் சனல்-4 க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில்லையென தீர்மானித்துள்ளது எனவும் இவ்வாறான நிலைமைகளை கையாள கூடுதல் வினைத்திறன் மிக்க தந்திரோபாயங்களை கைக்கொண்டுள்ளதே இதற்கான காரணமெனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான சனல்-4 ஆவணப்படத்தை தயாரித்த கெலும் மக்ரேயுடன் பேசிய போதே உடன்பாடு கண்ட பொய்கள் எனும் வீடியோக்கள் திரையிடப்படதாக அமைச்சர் கூறினார்.
பிபிசி, அல்ஜஸீரா மற்றும் 'ஹாட்ரோக்' நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு இவையாவும் நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளது என அமைச்சர் கூறினார்.

0 Comments