போகம்பர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளும் இன்றை தினம் அங்கிருந்து
தும்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.போகம்பர சிறைச்சாலையில் இருந்து 1200 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போது எஞ்சியுள்ள சுமார் 500 கைதிகளும் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
போகம்பர சிறைச்சாலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி பிரித் ஓதப்பட்டு மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்படும் .
இந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக 10ஆம் திகதியன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் படி 10ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்கள் இந்த சிறைச்சாலையை பார்வையிடவும் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகை அமைந்துள்ள புனித பூமிக்கருகில் சிறைச்சாலையும் தூக்குமேடையும் அமைந்திருப்பது உசிதமல்ல என ஜனாதிபதி பலமுறை சுட்டிக்காட்டியதையடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

0 Comments