பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருவர் தனது இரு
பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெயவாணி வாகீஸ்வரன் (33) என்ற பெண்ணே தனது 5 வயது மற்றும் 7 மாதங்கள்
நிரம்பிய இரு ஆண் பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் லண்டன், ஹெரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்துகொண்டுள்ள பெண்ணின் கணவர் சக்திவேல் வாகீஸ்வரன் (36) அங்கு
கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு
திரும்பியபோது சற்றும் எதிர்ப்பாராத வகையில் இந்த அதிர்ச்சி
நிகழ்ந்துள்ளது.




0 Comments