2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அவ் வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அரிது என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இரண்டாம் நிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் குறித்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தாரில் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான அங்கீகாரம் 2010இல் வழங்கப்பட்டது முதல் இப் போட்டி தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
'கட்டாரில் நடைபெறவுள்ள 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான திகதிகள் ஜூன், ஜூலை மாதங்களில் அமையாது' என சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஜெரோம் வெக்ல் தெரிவித்துள்ளார்.
'உண்மையைக் கூறுவதென்றால் இப் போட்டிகள் நவம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை நடத்தப்படுவதுதான் பொறுத்தமானது. அக் காலப்பகுதியில் உஷ்ணம் 22 பாகை செல்ஷியஸாக இருக்கும்' என்றார்.
பிறேஸில் நாட்டில் நடைபெறவுள்ள 2014 ஃபீஃபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இப் போட்டிகள் 2021 நவம்பர் 15 முதல் 2022 ஜனவரி 15 வரையா அல்லது 2022 நவம்பர் 15 முதல் 2023 ஜனவரி 15 வரையா நடத்தப்படும் என்பதை வெக்ல் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

0 Comments