Subscribe Us

header ads

இலங்கை முதல் இனிங்ஸில் 388 ஓட்­டங்­க­ள் நெருக்கடியில் பாகிஸ்தான்

மஹேல ஜெய­வர்­த­னவின் நிதான சதத்­துடன் இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 388 ஓட்­டங்­க­ளைக்­கு­விக்க 223 ஓட்­டங்­களால் பின்­னிலை வகித்த பாகிஸ்தான் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்­பி த்­துள்­ளது.

19 ஓட்­டங்­க­ளுக்குள் 3 விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்து ஆரம்­பமே தடு­மா­றிய அவ்­வணி நேற்­றைய 3 ஆம் நாள் ஆட்­ட­நேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்­தது.

இலங்கை-– பாகிஸ்­தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் நடை­பெற்று வரு­கின்­றது. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணியின் விக்­கெட்­டுக்கள் அனைத்­தையும் முதல் நாளி­லேயே பறித்த இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் 165 ஓட்­டங்­க­ளுக்குள் முடி­வுக்கு கொண்­டு­வந்­தது.

பின்னர் பதி­லுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்­பித்த இலங்கை அணி நேற்று முன்­தினம் 2 ஆவது நாள் ஆட்­ட­நேர முடிவில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 318 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் போட்­டியின் 3 ஆவது நாளான நேற்று மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 70 ஓட்­டங்­களைப் பெறு­வ­தற்குள் மீதி விக்­கெட்­டுக்கள் அனைத்­தையும் இழந்து முதல் இனிங்­ஸுக்­காக 388 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.

இதில் 46 ஓட்­டங்­க­ளுடன் நேற்று ஆட்­டத்தை தொடர்ந்த அணித்­த­லைவர் மத்­தியூஸ் மேல­திய ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழக்க மறு­மு­னையில் 106 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­டத்தை தொடர்ந்த மஹேல ஜெய­வர்த்­தன மேலும் 23 ஓட்­டங்­க­ ளைப்­பெற்ற வேளையில் அரங்கு திரும்­பினார்.

தொடர்ந்து ஏனைய விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து பறி­போக இலங்கை அணியின் முதல் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து நேற்றைய நாளிலேயே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ் தான் ஆட் ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­களை பெற்­றிருந்­தது.

குரான் மன்சூர் (6), அஹ ட்செஷாட் (9) முகமட் ஹபீஸ் (1) ஆகி யோர் அணி 19 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த டுத்து அரங்கு திரும்ப ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் (62)-–மிஸ்பா உல் ஹக் (53) ஆகியோர் 113 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சரிவிலிருந்து நிமிர்த்த நேற்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததது.

Post a Comment

0 Comments