A.J.M மக்தூம்
ஜப்பான் சர்வதேச விமான நிலையங்களில் முஸ்லிம்கள் தமது தொழுகைகளை
நிறைவேற்றுவதற்காக விஷேட அறைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில் ஜப்பானுக்கு வருகைத் தரும் முஸ்லிம்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அவாதானிக்கப் பட்டதன் பின்பே பிரஸ்தாப
ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
ஜப்பான் விமான நிலையங்களில் முஸ்லிம்களுக்கு தொழுகை வசதி செய்து கொடுக்கப்
பட்டுள்ள அதேநேரத்தில், முஸ்லிம் சுற்றுலாப் பயணிகளுக்காக சிரமம் எதுவுமின்றி ஹலால்
உணவைப் பெற்றுக் கொள்ள வசதிகளை மேற்கொள்ள உணவகங்களும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
மேலும் தெரிவிக்கின்றன.


0 Comments