Subscribe Us

header ads

பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய தொலைபேசி இலக்கம்!

பொலிஸாரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்கள் அவர்களுக்கு  எதிராக  முறைப்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதற்கமைய 0710 36 10 10 என்ற இலக்கத்திற்கு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான முறைப்பாடுகள் பக்கசார்பின்றி விசாரணை நடத்தி உரிய தீர்வு வழங்கப்படும் என்றும் இந்த வருடத்தில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார். 


Post a Comment

0 Comments