மின்சாதன பொருட்களுக்கு தேவையான பேட்டரிகள், யூபிஎஸ் தயாரிக்கும் பணியில்
ஐபால் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் பெண்களின் பாதுகாப்பை கருதி
பிரத்யேகமாக ஐபால் Andi Uddaan என்ற ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன் ஒன்றை
சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த மொபைலின் பின்
பக்கத்தில் எஸ்ஒஎஸ் எனப்படும் பட்டன் ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு
ஆபத்து நேரும்போது இந்த எஸ்ஒஎஸ் பட்டனை அழுத்தினால் போதும், அதிலிருந்து
முக்கியமான ஐந்து மொபைல் எண்ணுக்கு அழைப்பு சென்றுவிடும் என்றும் அத்துடன்
ஃபேஸ்புக் இணையதளத்திற்கும் தகவல் சென்றடைந்துவிடும் என்றும் ஐபால்
நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை இந்தியா ரூ.10,990 என்றும் அறிமுக விலையாக
ரூ-.8,999 வழங்கப்படும் என்றும் ஐபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபால் Andi Uddaan குறிப்புகள்:
245 ppi 5 இன்ச் (960 x 540 பிக்சல்கள்) கொள்ளளவு தொடுதிரை ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.3 GHz டியூவல் கோர் ப்ராசசர் Cortex A7 ப்ராசசர்,
இரட்டை காத்திருப்பு கொண்ட இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
டியூவல் எல்இடி ஃப்ளாஷ், BSI சென்சார் கொண்ட 8MP ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா,
BSI சென்சார் கொண்ட 5MP ஆட்டோ ஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா,
11mm அடர்ந்த,
168 கிராம் எடையுடையது,
3.5mm ஆடியோ ஜாக்,
எஃப்எம் ரேடியோ,
512MB ரேம்,
MicroSD கொண்டு 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள் நினைவகம்,
3G (HSDPA,: 21 நொடி, HSUPA: 5.6 Mbps),
WiFi 802.11 b / g / n,
ப்ளூடூத் 3.0,
ஜிபிஎஸ்,
USB OTG,
ஆண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்),
2000 mAh பேட்டரி.


0 Comments