Subscribe Us

header ads

செத்தான்டா சேகரு! வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வரி அறவிட நடவடிக்கை

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அதனை வளர்க்கும் நபர்களிடம் இருந்த வரியை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் வரி அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபையின் கால் நடை மருத்துவ அதிகாரி ஐ.பீ.பீ. தர்மவர்தன தெரிவித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்படும்.

தற்பொழுதுள்ள விபரங்களின் படி கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 11 ஆயிரம் நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நாய்களே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments