Subscribe Us

header ads

மெளலவி எம்.ஜே.எம்.ரியால் (கபூரி ) நேற்று காலமானார்


அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் முன்னாள் பொதுச் செயலாளரான மெளலவி  எம்.ஜே.எம்.ரியால் (கபூரி ) நேற்று 10.12.13 காலமானார்.
 
அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவில் கால் நூற்றாண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்து அளப்பரிய சேவைகளை ஆரவாரமின்றி செய்த முன்னால் கல்வி அதிகாரி பேராதனை கொழும்பு பல்கலைக் கழக பட்டதாரி மௌலவி எம்.ஜே.எம் ரியாழ் (கபூரி) நேற்று 10.12.13 காலமானார்.

1933/01/25 அன்று பிறந்த மௌலவியவர்கள் 1951 கபூரிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்க அறிஞராக பட்டம் பெற்றார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று பலருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்து முகவரி கொடுக்கின்றது, ஆனால் ஜம்மிய்யாஹ்வுக்கு பெருமையும் முகவரியும் தேடித் தந்த ஒரு சில பிரதானிகளுள் மௌலவி ரியாழ் பிரதானமானவர் என்பதனை எவரும்  மறுக்க மாட்டார்கள்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் அவரையும் அவரது பணிகளையும் பொருந்திக் கொள்வானாக..!

நன்றி: Puttalam Online

Post a Comment

0 Comments