அறுவைச்சிகிச்சைகளின் போது புதிய எலும்பு இழையங்களை
உருவாக்கக்கூடிய பேனா ஒன்றை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
விபத்துகளில் அல்லது உடல் உறுப்புகள் வெட்டப்படுகையில்
எலும்புகள் உடைக்கப்பட்டு அவற்றின் இழையங்களும் சேதமடைகின்றன.
இதன் காரணமாக புதிய முழுமையாக செயற்படக்கூடிய எலும்பை கட்டமைப்பது சிரமமாகின்றது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக பயோபென்
(உயிரியல் பேனா) என்றழைக்கப்படும் கையில் வைத்திருக்கக் கூடிய
முப்பரிமாண அச்சிடும் உபகரணமொன்றை வுல்லோங்கோங்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இந்த முப்பரிமாண அச்சிடும் இயந்திரம் சேதமடைந்த எலும்புகளுக்கு
இழைய படலங்களை சேர்ப்பதுடன் அந்த எலும்பை ஏற்கனவே உள்ள நரம்புகள் மற்றும்
தசைகளுடன் இணைக்கிறது.





0 Comments