கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி யொருவரின் மரணத்திற்குAnaphylaxis) காரணம் என்பது பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் டெபோடொன் Depotone என்ற
குடும்பத் திட்ட தடுப்பூசி மாத்திரம் பாவனையிலிருந்து வாசனைப் பொருட்கள்
மற்றும் மருந்து பொருட்கள் அதிகார சபையால் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக
சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.
கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த
குறித்த பெண்மணி டெபொடொன் என்ற குடும்பத் திட்ட ஊசி மருந்தைப் பெற்றதைத்
தொடர்ந்து உயிரிழந்துள்ளார் என்ற அடிப்படையிலேயே இந்த ஊசி மருந்து உடனடியாக
பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி
குறிப்பிட்டார்.
இந்த ஊசி மருந்து எந்தவொரு
அரசாங்க ஆஸ்பத்திரியிலோ அல்லது அரசாங்க குடும்பத் திட்டக் கிளினிக்குகளிலோ
வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர் அந்த ஊசி மருந்து சில தனியார்
கிளினிக்குகளில் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஊசி மருந்து தொடர்பாக
மருந்துப் பொருட்கள் தொடர்பான தேசிய தர ஆய்வு கூடம் மேலதிக ஆய்வுகளை
மேற்கொண்டு வருவதாகவும் அதன் மூலம் அப்பெண்மணியின் மரணத்திற்கு இம் மருந்து
காரணமாக அமைந்திருக்குமா என்பதை இப்பரிசோதனையை அடிப்படையாக வைத்து
முடிவுக்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பத் திட்ட ஊசி மருந்துகளில்
இதனைத் தவிர ஏனைய ஊசி மருந்துகள் வழமை போன்று வழங்கப்படும் என்று
குடும்பத் திட்டப் பணியகப் பணிப்பாளர் டொக்டர் தீப்தி பெரேரா கூறினார்.
இவ்வாறான நிலையில் குறித்த
பெண்மணியின் பிரேதப் பரிசோதனையில் அபூவமாக ஏற்படும் ஒவ்வாமையே
(Anaphylaxis) அப்பெண்மணியின் மரணத்திற்குக் காரணம் என உறுதியாகியுள்ளது.
இந்த அபூர்வ ஒவ்வாமை இருபது
இலட்சம் பேரில் ஒருவருக்கே ஏற்படக்கூடியது என உலகளாவிய மருத்துவ
நிபுணர்களால் மதிப்பிடப் பட்டுள்ளது என்று வாசனைப் பொருட்கள் மற்றும் தேசிய
மருந்துப் பொருள் அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம
குறிப்பிட்டார்.
நன்றி: தினகரன்.

0 Comments