Subscribe Us

header ads

கற்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டஇந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டஇந்திய மீனவர்கள் 15 பேரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்ற பதில் நீதவான் பஸால் அபுத்தாஹிர் இன்று உத்தரவிட்டார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், மீனவர்களின் படகுகளினை கற்பிட்டி கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துகொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 26 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments