கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி வீட்டுத்திட்ட
மலசல கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரி
அப்பகுதியை சூழ வசிக்கின்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமைல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த மலசல கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கசிவு ஏற்பட்டிருப்பதால் அதனை அகற்ற வேண்டும் அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது,இப்பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்று கல்முனை தமிழ் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வரை சந்தித்த தேரர் தலைமையிலான குழுவினர் முதல்வர்- சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறித்த இப்பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன்போது முதல்வர் உறுதியளித்தார்.

0 Comments