Subscribe Us

header ads

உணவை பிரிண்ட் செய்யுங்க சாப்பிடுங்க... முப்பரிமாண உணவு பிரிண்டர் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)

கார், எலும்பு, துப்பாக்கி, கிற்றார் என்பவற்றை முப்பரிமாணப் பிரிண்டர் மூலம் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்ட விஞ்ஞானிகள் தற்போது முப்பரிணமாண உணவு பிரிண்டரையும் உருவாக்கி அசத்தியுள்ளனர். 


உணவினை உற்பத்தி செய்யும் இந்த முப்பரிமாண பிரிண்டருக்கு 'பூடினி' (Foodini) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஆய்விலுள்ள பூடினி முப்பரிமாண பிரிண்டர் இயந்திரத்தினை அடுத்த வருடம் நடுப்பகுதியில் சுமார் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இதனை உருவாக்கியுள்ள பூடினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் குடும்பத்துக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் தயார் செய்ய முடியும். அதேபோல வியாபார நோக்கத்திற்காகவும் பூடினி இயந்திரத்தினைப் பயன்படுத்த முடியும் என நிறுவனத்தின் இணை நிறுவரான லைநெற்றி குஷ்மா கூறியுள்ளார்.

சொக்லேட் முதற்கொண்டு பலதரப்பட்ட உணவுகளையும் தன்னியக்கமாக தயார் செய்யும் பூடினி பிரிண்டரில் உணவுகளை வைத்துப் பாதுகாக்கவும் முடியும். அத்துடன் இதன் மூலம் விரும்பிய வடிவில் அதாவது மிருகங்கள், கார்டூன் கதாபாத்திரங்கள் போன்றவாறும் உணவுகளை தயார் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments