(JM)
உயர் கல்வி என்பது இன்றைய சமூகத்தில் அத்தியவசியமான ஒரு விடயமாக இருப்பதோடு எதிர்கால திட்டமிடல்களுக்கும்இ சமூக மேம்பாட்டுக்கும் அஸ்திவாரமாக விளங்கும் ஒரு விடயமாகும். இலங்கை ஒரு வளர்த்து வரும் நாடு என்பதற்கினங்க மாணவர்களின் கல்விரீதியான செயற்பாடுகளில் அண்மைக்காலமாக முன்னேற்றங்கண்டு வருகிறது. அவ்வாறான முன்னேற்றங்களில் உயர் கல்வியும் தாக்கம் செலுத்துகின்றது.
எமது நாட்டில் உயர்கல்வி என்று நோக்கும் போது இரண்டு வகையான பிரிவுகள் அடங்கும். ஓன்று அரச சார்பான உயர்கல்வி மற்றையது அரசு சார்பற்ற உயர்கல்வியாகும். பாடசாலை உயர்தர பரீட்சை தோற்றிய பின் ஒரு மாணவனின் கல்வி ரீதியான இலக்கு பல்வேறு திசைப்படுகிறது. சிறந்த பேறை பெற்ற மாணவர்களில் 22000 இற்கும் குறைவானவர்களே பல்கலைகழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுகின்றனர். தெரிவுசெய்யப்படாதவர்களில் சிலர் தமது உயர்கல்விக்காக அரச சார்பற்ற நிறவனங்களை நாடுகின்றனர். ஆனால் சில மாணவர்கள் உயர்கல்வியில் நாட்டமற்று போகின்றனர்.
ஆனாலும் அரசு பல்கலைகழகங்களை மாத்திரம் நிறுவாது உயர்கல்வி நிறுவனங்களையும் நிறுவி அதன் மூலம் முற்று முழுதான இலவச உயர்கல்வியை வழங்குகிறது. அந்த அடிப்படையில் கணிதப்பிரிவில் உயர்தரப்பரீட்சை தோற்றி குறைந்த வெட்டுப்புள்ளியை பெற்று பல்கலைகழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்காக உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தொழில்நுட்ப கல்வி நிறுவகம், பொறியியல் தொழில் நுட்ப கல்வி நிறுவகம், போன்ற அரச உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் உயர தேசிய பொறியியல் டிப்ளோமா, தேசிய பொறியியல் டிப்ளோமா, தேசிய பொறியியல் டிப்ளோமா, போன்ற பொறியியல் டிப்ளோமா சான்றிதழுக்கான பாடநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அரசாங்க அனுமதி பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் படிப்பிற்கான அனுமதியும் பெற்றுக்கொள்ள முடியும்;. தேசிய தொழில் வாய்ப்பு தரப்படுத்தல் பல்கலைகழகங்களால் வழங்கப்படும். இப்பாடநெறிக்கான விண்ணப்பங்கள் அரச வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படுகின்றன.
மேலும் இவ்வாறான பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு அரச மற்றும் தனியார் புலமைப்பரிசில்கள்இதங்குமிட வசதி போன்றன கிடைக்கின்றன.
இவ்வாறான பாடநெறிகள் பற்றி அறியாத அநேகமான முஸ்லிம் மாணவர்கள் முற்றுமுழுதாக உயர்கல்வியை புறக்கணித்து வேறு துறைகளில் ஈடுபட முயற்சித்து தோற்றுப்போகின்றனர்.அவ்வாறு வாய்ப்புக்களை தவற விட்டு பிரயோசனமற்ற பதர்களாக அல்லாமல் வாய்ப்புகளை பயன்படுத்தி கல்விரீதியான எமது சமூக வளர்ச்சிக்கு வித்திடுவோம்.
HNDE இற்கான புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றன எனவே விருப்பமுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களை 2013.12.13 இல் வெளிவரும் அரச வர்த்தமானி அல்லது www.sliate.ac.lk , www.hndelk.com எனும் இணையதளத்திலும்
பெற்றுக்கொள்ளலாம்.

0 Comments