Subscribe Us

header ads

இலங்கையில் நோய் பரப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு.

இலங்கையில் நோய் பரப்பியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு
மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அந்த அமைப்பு மறுப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாறு இலங்கையில் நோய்களைப் பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இனந்தெரியாத ஒரு வகை சிறுநீரக நோய்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு பரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கையின் விவசாயத்தில் ஈடுபடுவோர் இனந்தெரியாத சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்னர். நோய்களினால் பாதிக்கப்பட்ட 20,000 பேர் கொல்லப்பட்டதுடன், 450,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளே இந்த நோய்க்கான பிரதான ஏதுவென நீண்ட ஆய்வுகளின் பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
       
கட்மியம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சுப் பதார்த்தங்களினால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். பல்தேசிய நிறுவனங்களின் சார்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் இரசாயன பசளைகள் மற்றும் இரசாயன கிருமிநாசினிகளை ஊக்குவித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் எந்தவொரு தரப்பினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேம்படுத்தியதோ பிரச்சாரம் செய்ததோ கிடையாது என ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனம் அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments