இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியை மக்களவை தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கங்குலிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, மோடி கங்குலியிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கங்குலியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
கொல்கத்தாவிலுள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கு வந்த அழைப்பு உண்மைதான் என்று கூறினார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இதுகுறித்து விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments