Subscribe Us

header ads

140 பயணிகளுடன் திருச்சியிலிருந்து இலங்கை புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு

திருச்சியிலிருந்து, இலங்கைக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றின்

இந்த விமானம் நேற்று முன்தினம் மாலை 140 பயணிகளுடன் திருச்சி விமான
நிலையத்திலிருந்து புறப்பட தயாரான நிலையில் விமான ஓடு தளத்திலிருந்து மேலெழுந்த போதே அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தமை தெரியவந்தது.

உடனடியாக கீழிறக்கப்பட்ட அந்த விமானம் பொறியிலாளர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் இயந்திரத்தில் காணப்பட்ட கோளாறு திருத்தப்பட்டது. பின்னர் அந்த விமானம் இலங்கைக்கான தனது பயணத்தை நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்தது.
இயந்திரத்தில் ஏறபட்டிருந்த கோளாறு  காரணமாக குறித்த விமானம் தாமதமாகவே தனது பயணத்தைத் தொடர வேண்டிய நிலையேற்பட்டது. இந்தச் சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments