Subscribe Us

header ads

'அனுதாப பொத்தானை' தயாரிக்கும் பேஸ்புக்

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை  வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான 'அனுதாப பொத்தான்' ஒன்றை தான் தயாரித்துவருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ் புக் தகவல்களை விரும்புபவர்கள் அதை விரும்புவதாக தெரிவிப்பதற்கு 'லைக்' பட்டன் உள்ளது. ஆனால், மரணச்செய்திகள் போன்ற துயரமான தகவல்களை வெளியிடும்போதும் அதை வாசித்ததை தெரிவித்துக்கொள்வற்காக  'லைக்' பொத்தானையே கிளிக் செய்ய நேரிடும்போது சங்கடத்துக்குள்ளாலாம். ஏனெனில், அத்துயரச்செய்தியை 'விரும்புதாகவும் இது அர்த்ததம் கொள்ளப்படலாம்.

இச்சங்கடத்தை தவிர்ப்பதற்காக 'அனுதாப பொத்தானை  பேஸ்புக் பொறியியலாளர் ஒருவர்  தயாரித்து வருவதாக டான் மரியெல்லோ ஏனும் மற்றொரு மென்பொருள் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த அனுதாப பொத்தானை வெளியிடுவதற்கான தருணம் இன்னும் வரவில்லை' எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments