கல்பிட்டி வரலாற்றில் கல்விப் பயணத்தின் முதற்படியாக இந்தக் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைத்தலைவர்களாக
1.ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர் STM FAIROOS ZAMAN
2.அதிபர் MIM RAZZACK ஆகியோரும்
3.செயலாளர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் MNMM FAHRI
4இணைச் செயலாளர் S.M ASLAM B.A.HONS அவர்களும்
5. பொருளாளராக TLM MAKEEN (முன்னாள் Forut நிறுவன மாவட்ட இணைப்பாளர்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மற்றும் ஊரின் உலமாக்கள், துறை சார்ந்த கல்வியலாளர்கள்,அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள், ஜும்ஆ மஸ்ஜிதுகளின் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள் ஏனைய சங்கங்களின் தலைவர்ளை உள்ளடக்கியதான இந்த அமைப்பு எதிர் காலத்தில் பாடசாலை நிர்வாகத்திற்கும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கல்வி மேம்பாட்டிற்காக தேவையான நேரத்தில் பொருத்தமான சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பாக இது காணப்படும்.
பாடசாலையின் நிர்வாகம்,மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள், பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க செயற்பாடுகள் குறித்து இது பாடசாலைக்கு வெளியில் இருந்து சேவைகளை செய்யும் அமைப்பாக காணப்படும்.
பாடசாலையில் கற்பித்தலுக்கான தடைகள் மற்றும் சவால்கள் இருப்பின் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தோடு இணைந்து பாடசாலையினுடைய கல்வி முன்னேற்றத்திற்காக பாடசாலைக்கு வெளியில் ஊர்மயப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாக இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
இதில் கல்பிட்டியின் கல்வி அபிவிருத்திக்காக இணைந்து செயற்பட ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்:
தலைவர்,
கல்வி அபிவிருத்தி ஒன்றியம்,
கல்பிட்டி.
25-11-2023
0 Comments