மக்கள் அணி திரண்டு வீதிக்கு இறங்கினால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவுக்கு ஓட வேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் முறையாகச் செயற்படாவிட்டால் தோல்வியைச் சந்திக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments