Subscribe Us

header ads

கூலிக்கு குரைக்கும் அமைச்சரின் கழுத்து என்று விமல் வீரவன்சவை சாடிய சரத் பொன்சேகா

 


அரசாங்கத்தில் இருக்கும் கூலிக்கு குரைக்கும் அமைச்சரின் கழுத்து தற்போது உடைந்து விழுந்து, சட்டைப் பைக்குள் கிடப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரை ஆக்கப்பூர்வமாக இருக்குமாறு கூறும் அந்த அமைச்சர் கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்தவர் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஆக்கப்பூர்வமானதாக இல்லை என அந்த அமைச்சர் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சரத் பொன்சேகா இதனை கூறியதுடன் அந்த அமைச்சரின் பெயரை குறிப்பிடவில்லை.

 தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, அந்த அமைச்சர் ஆக்கப்பூர்வமானவர் என்பதன் காரணமாகவே இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டிருந்தார். இரண்டு பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள். ஒன்றில் அவர் மூத்தவர், மற்றொன்றில் அவரது மனைவி மூத்தவர் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஆளும் கட்சியின் தரப்பினர் இருந்து குறுக்கீடுகள் வந்த போது பொன்சேகா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“ பைத்தியகாரன் அமரும். இவற்றை கேளும், பிச்சைக்கார தனமாக கதையை கூறிய உங்களது தரப்பின் நபர் குறித்து கூறும் போது வலிக்கின்றதா?. பைத்தியகாரன் போல் உளறாது உட்கார்ந்து கேளுங்கள்.

இவற்றை கூறும் போது இவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. சோற்று பொதிக்காக அரசியல் செய்பவர்கள் குழம்புகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியில் இருக்கும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு அந்த நபரை அரசியலுக்கு கொண்டு வந்து, ஒரு அரசியல் பாத்திரமாக உருவாக்கினர். காற்சட்டை அணிவது எப்படி என்பதை அந்த நபர் மக்கள் விடுதலை முன்னணியிடமே கற்றுக்கொண்டார்.

அப்படி வந்த நபர், ராஜபக்ச அணியின் இலஞ்சம் மற்றும் பணத்தை கண்டதும் அவர்களின் அணிக்கு தாவினார்.

பொய்யாக தற்போது அரசாங்கத்தை விமர்சித்தாலும் வரவு செலவுத்திட்டத்தின் வாக்கெடுப்பின் போது, அவர் மற்றும் அவரது அணியினர் வாலை மடக்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள்.” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, அமைச்சர் விமல் வீரவங்ச குறித்தே மறைமுக நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

 

Post a Comment

0 Comments