Subscribe Us

header ads

வட்சாப் குழுமத்தில் ஒருவரின் தனிப்பட்ட அரட்டைகளை அட்மின்கள் முடக்க முடியும். (New Update)

 

வாட்ஸ்அப் செயலியில் பாவனையாளர்கள் ஒருவரின் அரட்டைகளை முடக்குவதற்கு அனுமதிக்கும் அம்சத்தில் புதிய மாற்றம் ஒன்றை  வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இவ் புதிய வாட்ஸ்அப் அம்சம் கடந்த சில மாதங்களாக iOS மற்றும் Android பீட்டா ஆகியவற்றில் பரீட்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது. 

வாட்ஸ்அப்  செயலியில் அரட்டைகளை முடக்குவதற்கான தெரிவில் “1 ஆண்டு” என்பது   “எப்போதும்” என  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் செயலியின் இவ் புதுப்பிப்புக்கு முன்பு, பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு அரட்டையை எட்டு மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் முடக்கலாம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதுப்பிப்பில்  ஒருவரின் அரட்டையை  எப்போதும் முடக்கி வைக்க கூடியதாக உள்ளது. 

Android மற்றும் iOS க்கான புதிய வாட்ஸ்அப் புதுப்பிப்புகளில் இவ் புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய புதுப்பிப்பாகத் தெரியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அரட்டையிலிருந்து அறிவிப்புகளைப் பெற விரும்பாதவர்களுக்கு நிச்சயம் இது பயனுடையதாக  இருக்கும் என நம்பப்படுகின்றது. 

Post a Comment

0 Comments