கல்பிட்டி பிரதேச பெண் கிராம சேவகருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த பிரதேச செயலாளர் நந்தன சோமதிலக்கவுக்கு எதிராக கல்பிட்டி நகரில் 22-10-2020 பாரிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
18-10-2020 பொலிஸில் முறைப்பாடு செய்து அவர் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு கைதாகி சில நிமிடங்களிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் 22-10-2020 கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு அவர் கடமைக்கு அமர்த்தப்பட்டத்தை தொடர்ந்து மக்கள் கொந்தளித்து விரட்டியடிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்பாட்டத்திற்கு கல்பிட்டி நகர அரசியல்வாதிகள் முழு ஒத்துழைப்பை வழங்கி இருந்ததுடன், ஆர்பாட்டத்தில் பெருந்திலான மக்கள் கலந்துக் கொண்டு மூத்த அரசியல் வாதிகளுடன் இணைந்து போராட்டத்தில் வெற்றியும் கண்டனர்.


0 Comments