கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த (27) அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அல் அக்ஸாவின் அதிபர் ரோஸ் புகாரி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அல் அக்ஸாவின் ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் பங்கேற்று இருந்தனர்.
அதிபரினால் பழைய மாணவர் சங்கத்தின் சென்ற கால நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவு ஆண்டு விழாவை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வது தொடர்பிலும் பேசப்பட்டது, தொடர்ந்து அல் அக்ஸாவின் ஆசிரியர்களான பாஸர் Sir, அருஸ் Sir, ஷாபி Sir அகியோரால் உரை நிகழ்த்தப்பட்டு பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் அடைவுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன்,
அதனை தொடர்ந்து பழைய மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற,
நிர்வாகத்தின் தலைவராக பாடசாலையின் அதிபர் ரோஸ் புகாரி அவர்களும்..
செயலாளர் - முன்திர்
உபதலைவர் - பாரிஸ் Sir
பொருளாளர் - நுஸ்மி
உபசெயலாளர் - ஆதில்சான்
நிர்வாக உறுப்பினர்கள்- ரில்வான், சபான்
ஆகியோர் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டனர்
""குறிப்பு- அல் அக்ஸாவில் படித்த அனைத்து முன்னாள் மாணவர்களும் பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுபினராக செயற்பட முடியும், விண்ணப்பபடிவத்தை செயலாளரிடம் பெற்று உத்தியோகப்பூர்வமாக சங்கத்தில் இணைந்துக் கொள்ளவும்.
தொடர்ந்து.. கல்வி நடவடிக்கைகள், விளையாட்டு, பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி செயற்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி, ஒழுக்கத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் பேசப்படடு, பழைய மாணவர்கள் சங்கத்தின் கூட்டம் நிறைவுப் பெற்றது.
இர்பான் ரிஸ்வான்
OBA- Al Aqsa
0 Comments