ஜூலை 30 (வியாழக்கிழமை) அராஃபத் தினம் வருவதால், அதற்கடுத்த நாளான ஜூலை
31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈத் அல் அத்ஹா விடுமுறை என சவூதி அரேபியாவின்
உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்திருக்கிறது.
ஹஜ் பெருநாள்
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தின் 10 வது நாள் ஹஜ் பெருநாள்
எனப்படும் ஈத் அல் அத்ஹா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை (ஜூலை
22) துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் என உச்ச நீதிமன்றம்
அறிவித்திருக்கிறது.
ஆகவே, நாளையிலிருந்து 10 வது நாள் அதாவது ஜூலை 31 ஆம் தேதி ஹஜ் பெருநாள் துவங்குவதாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருக்கிறது.
நேற்று பிறையானது தெரியவில்லை என்றும், அதே வேளையில் இன்றைய சூரிய
அஸ்தமனத்திற்கு பிறகு பிறை தெரியும் எனவும் பிறை பார்க்கும் கமிட்டி
தெரிவித்தததைத் தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி ஹஜ் பெருநாள் துவக்கம் என்பது
உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சவூதியின் குடிமக்கள் மற்றும் இங்கே வசிக்கும் வெளிநாட்டவர்கள் என
மொத்தம் 10,000 பேருக்கு மட்டுமே இந்த வருடத்திற்கான ஹஜ் பயணத்திற்கு
அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் வெளியீடு
கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக
இவ்வாண்டு வரவிருக்கும் ஹஜ் யாத்திரையில் பல கடுமையான சுகாதார நடவடிக்கைகள்
மற்றும் நெறிமுறைகளை சவூதி அரேபியா அமல்படுத்தும் என்று சுகாதார அமைச்சர்
டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தாண்டு ஹஜ் யாத்திரையின் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
அபராதம்
இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது, ஜூலை 19 முதல் துல்ஹஜ் 12 வது நாள் (ஆகஸ்ட்
02) வரை அனுமதி இல்லாமல் மினா, முஸ்தலிஃபா மற்றும் அராபத் ஆகிய புனித
தளங்களுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்முறை விதிமுறைகளை
மீறுபவர்களுக்கு 10,000 சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும்,
விதிமீறல் தொடர்ந்தால் அபராதம் இரட்டிப்பாகும் எனவும் சவூதி உள்துறை
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து
மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மசூதிகளில் மட்டுமே தொழுகை
சவூதியின் இஸ்லாமிய விவகாரம், துவா மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர்
ஷேக் அப்துல்லதீப் அல்-ஷேக் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஈத்
அல் அத்ஹா (ஹஜ் பெருநாள் தொழுகை) தொழுகைகள் மசூதிகளில் மட்டுமே
நடத்தப்படும் என்றும் எந்த திறந்தவெளி மைதானத்திலும் நடக்காது எனவும்
அறிவித்திருந்தார். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
0 Comments