இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தின் 10 வது நாள் ஹஜ்
பெருநாள் எனப்படும் ஈத் அல் அத்ஹா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்
நாளை (ஜூலை 22) துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் என சவூதி உச்ச நீதிமன்றம்
அறிவித்திருக்கிறது.
ஆகவே, நாளையிலிருந்து 10 வது நாள் அதாவது ஜூலை 31 ஆம் தேதி ஹஜ் பெருநாள்
துவங்குவதாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருக்கிறது. இதுகுறித்து மேலும்
அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இதனையடுத்து சவூதி அரசு, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத்
அல் அத்ஹா விடுமுறை தினங்களை அறிவித்திருக்கிறதாக சவூதி பத்திரிகை முகமை (SPA) நேற்று தெரிவித்தது.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், பொதுத் துறை ஊழியர்களுக்கு ஜூலை 24 ஆம் தேதியிலிருந்து
ஆகஸ்டு 8 ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை
ஊழியர்கள் தங்களுக்கான இரண்டு வார விடுமுறை முடிந்து ஆகஸ்டு 9 ஆம் தேதி
பணிக்குத் திரும்புவார்கள் என சவூதி பத்திரிகை முகமை (SPA)

0 Comments