கால சுழற்சிக்கு ஏற்ப மாற்றமடையும் வாழ்க்கை சக்கரத்தில் நாம் எல்லோரும் சுழல்கின்ற போதும் எமது ஊரின் மண் வாசனை மறக்க முடியாத ஒன்றே.
நாம் எல்லோரும் ஊரினை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்ற போதும் நாம் சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய வீதிகளும் விளையாட்டு மைதானங்களும் எமது மனத்திரையில் இடை இடையே வந்து நினைவாக நின்று மறையாமல் பூரிப்பை ஏற்படுத்துகின்றன.
எமதூர் வளர்ச்சி எனும் போது நடந்த பலவற்றையும் தற்போது நடந்து வருகின்ற பல செயல்களை பற்றியும் அதற்காக உழைப்பவர்களையும் உழைக்கின்றவர்களையும் குறிப்பிடலாம்.
ஊர் டீவியின் உருவாக்கத்தின் நோக்கம் எம்முடன் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற சேவை நோக்கர்களின் பெருமையை பறை சாற்றுவதும் கிராம பாரம்பரிய கலைகள், ஊர் விவகாரங்கள், விளையாட்டு, சமூகம் பற்றி எடுத்தியம்புவதும் எமது மக்களின் உணர்வுகளுடன் உறவாடும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் அறிந்து உவகை அடைவதற்கும் ஆகும்.
இதன் மூலம் நாம் அனைவரும் ஓர் இறுக்கமான அன்புக் கட்டுக்குள் வரமுடியும்.
இந்த வகையில் எமது மக்கள் தற்போது நாட்டிற்கு நாடும் இடத்திற்கு இடமும் பரந்துபட்டு வாழ்ந்து வருவதனால் நாம் எல்லோரும் ஒவ்வொருவரினதும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வது கடினமாக உள்ளது.
எனவே இதனை எமது டீவியின் நிர்வாகம் கருத்திற் கொண்டு விளம்பரங்கள் பகுதியூடாக ஒவ்வொரு மக்களினுடைய சுக துக்க நிகழ்வுகளை காட்சிபடுத்த எல்லோரும் அதனை அறிந்து கொண்டு ஒருங்கிணைந்த வாழ்வினை வாழ ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளை எமது நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு எமது ஒவ்வொருவரினதும் திறன்களை வெளி உலகிற்கு கொண்டு வருவோம்.
https://www.facebook.com/kalpitiyatv/ (லைக் செய்திடுங்கள்)
0 Comments