கடந்தமாதம் 29 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட "When the looting starts, shooting starts."என்ற பதிவு இன்று உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இந்த பதிவுக்கு எதிராக பேஸ்புக் (Facebook) நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கொக்கோ கோலா, யூனிலிவேர் ,ஸ்டார்பக்ஸ் ,வேரிசன் போன்ற சர்வதேச நிறுவனங்கள் உட்பட 100 கும் மேற்பட்டவை விளம்பர புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
கூகுல்(Google) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வருமானத்தை டிஜிட்டல் விளம்பரங்கள் மூலமாக ஈட்டும் நிறுவனம் பேஸ்புக் (Facebook)ஆகும்.
கடந்த வருடம் மட்டும் 69.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த விளம்பரங்கள் மூலம் வருவாயாக ஈட்டியது.
இப்போது இந்த பகிஷ்கரிப்பின் காரணமாக பேஸ்புக் (Facebook) நிறுவனம் பங்குகளின் விலையில் அண்ணளவாக 9 சதவீத வீழ்ச்சியைச ந்தித்துள்ளது.
0 Comments