Subscribe Us

header ads

ஐக்கியம் Mean Untited : ஐ.நா. உத்தியோகபூர்வ காருக்குள்பகிரங்கமாக பாலியல் உறவு - இஸ்ரேலி சம்பவம் ; ஐ.நா. அதிர்ச்சி


இஸ்ரேலில் ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்க கார்களில ஒன்றில் வெளிப்படையாக இடம்பெற்ற பாலியல் உறவு தொடர்பான வீடியோ (ஒளிநாடா) காட்சியால் அதிர்ச்சியும் கலக்கமும் அடைவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வீடியோ காட்சியில் யு.என். அடையாளத்தைக் கொண்ட கார் ஒன்றின் பின் ஆசனத்தில் ஆண் ஒருவரை ஆரத்தழுவியவாறு சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபடுவது தெரிகின்றது.

சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்தக் காட்சி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் கடல்பரப்பை அண்மித்த பிரதான வீதி ஒன்றில் ஒளிப்பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதாக தெரிவித்த ஐ.நா., ஒளிநாடாவில் காணப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவர் எனவும் குறிப்பிட்டது.

இஸ்ரேலில் அமைதிகாக்கும் அமைப்பில் பணியாற்றும் அலுவலர்கர்களே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என நம்பப்படுவதாக ஐ.நா. தெரிவித்தது.

அதே வாகனத்தில் மற்றொரு பயணி முன் ஆசனத்தில் சரிந்திருப்பது இந்தக் காட்சியில் காணக்கூடியதாக இருக்கின்றது. கார் நகர்வதால் சாரதியைப் பார்க்கக்கூடியதாக இல்லை.

18 செக்கன்களைக் கொண்ட இந்த வீடியோவில் காணப்பட்ட நடத்தை வெறுக்கத்தக்கது என ஐ.நா. செயலாளர்நாயம் அன்டோனியோ குட்டேரெஸின் பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக் தெரிவித்தார்.

‘எமது எல்லா செயற்பாடுகளுக்கும் ஐ.நா. அலுவலகர்களின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கும்  இத்தகைய நடவடிக்கை முரணானது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வெளிப்படையான பாலியல் உறவுச் செயல் சம்மதத்துடன் நடந்திருக்குமா அல்லது பணத்துக்காக இடம்பெற்றிருக்குமா என அவரிடம் கேட்கப்பட்டபொது, இந்தக் கேள்விகள் தற்போது நடைபெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாகும் என டுஜாரிக் பதிலளித்தார்.

தனது அலுவலகர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அதற்கு எதிராக செயற்படுவதற்கான கடுமையான கொள்கைள் ஐ.நா.விடம் இருக்கின்றது.

ஒழுக்க விதிகளை அலுவலகர்கள் மீறியதாக கண்டறியப்பட்டால் அவர்கள் திருத்தப்படுவார். அத்தகையவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது ஐ.நா. அமைதிகாக்கும் செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படலாம். எனினும் மேலதிக ஒழுக்க அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அவர்களது சொந்த நாடுகளின் பொறுப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதிகாக்கும் படையினர் மற்றும் ஏனைய அலுவலகர்களினால் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ. நா. மிக நீண்டகாலமாக கண்காணித்து வருகின்றது.

அண்மைய வருடங்களில் அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவண்ணம் உள்ளது. ஐ.நா. மட்டத்தில் பாலியல் முறைகேடுகள் எவ்வகையிலும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்ற உறுதிமொழியை செயலாளர்நாயகம் குட்டேரெஸ் வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக தவறுகளைக் கண்காணிக்கும் குழுவினால் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் டுஜாரிக் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிலிருந்து வெளியான ஒளிநாடா குறித்து ஆச்சரியப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண்கள் உரிமைகள் பிரிவு பணிப்பாளர் ஹீதர் பார் தெரிவித்தார்.

‘இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடைபெறுவது நல்லது. ஆனால், இந்த ஒரு ஒளிநாடாவைவிட பெரிய பிரச்சினை ஐ.நா.வுக்கு இருக்கின்றது’ என்றார் அவர்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகர்கள் பாலியலை சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் துஷ்பிரயோகம் செய்வதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் மிகப் பெரிய பிரச்சினை’ என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பாக ஐ.நா. அலுவலகர்களுக்கு எதிராக 2019இல் 175 முறைப்பாடுகள் செய்யப்பட்டிரருந்தாக அறிக்கை ஒன்று கூறுகின்றது. அவற்றில் 16 உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலும் 16 ஆதாரமற்றவை எனவும் தெரிவக்கப்படுகின்றது. ஏனையவை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.


Post a Comment

0 Comments