கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் வலுப்பெற்றிருந்த போராட்டங்களின் மத்தியில், Anti-
Defamation League மற்றும் NAACP ஆகிய அடங்கிய ஆறு அமைப்புகள் ஜுலை மாதம் முழுவதிலும் Facebook இல் விளம்பரப்
பதிவுகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரியிருந்தன. வெறுப்புணர்வூட்டும் பதிவுகளை கட்டுப்படுத்த Facebook
தவறியிருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த கோரிக்கையை ஆறு அமைப்புகளும் இணைந்து முன்வைத்திருந்தன.
Cambridge Analytica scandal எனும் பலரும் அறிந்த 87 மில்லியன் Facebook பாவனையாளர்களின் தரவுகளை
முறையற்ற வகையில் அணுகியிருந்தமை அடங்கலாக பல்வேறு தரவு தவறான கையாள்கைகளுக்கு மேலதிகமாக,
வெறுப்புணர்வூட்டும் பதிவுகளை நீக்காமையை பிந்திய ஒப்பந்த மீறல் செயற்பாடாக காண்பதாக Viber
குறிப்பிட்டுள்ளது. அதன் பிரகாரம், Facebook உடனான விளம்பர உடன்படிக்கைகளை இடைநிறுத்துவதனூடாக,
#StopHateForProfit நடவடிக்கையை ஒரு படி முன்னால் கொண்டு செல்வதாகவும் Viber அறிவித்துள்ளது.
Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகாவுவா கருத்துத்
தெரிவிக்கையில், ´இன்றைய உலகில் தனது
செயற்பாடுகள் தொடர்பில் மோசமான தீர்மானத்தை Facebook வெளிப்படுத்தி
வருகின்றது. தரவுகளை தவறாக கையாண்டமை
முதல் அதன் app களில் போதியளவு பிரத்தியேகப் பாதுகாப்பு இன்மை வரையில் பொது
மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை
பெருமளவில் எழுந்துள்ளது. Facebook தனது எல்லையை மீறியுள்ளது. உண்மையை
மறைக்க நாம் விரும்பவில்லை. வன்முறைகளைத் தூண்டும் சில பதிவுகளால் சில
மக்கள் துன்பங்களை அனுபவிப்பதுடன் நிறுவனங்கள் இது தொடர்பில் தமது
தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.´ என்றார்.
2020 ஜுலை முற்பகுதியில் Viber app இலிருந்து Facebook உள்ளம்சங்களை நீக்கும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படும். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளம்பரங்களை இடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
0 Comments