Subscribe Us

header ads

உலகின் முதல் இனவெறி எதிர்ப்பாளர் முஹம்மது நபி - ரைஸ் பல்கலைக்கழகம் (வீடியோ இணைப்பு)


உலகின் முதல் இனவெறி எதிர்ப்பாளர் என முஹம்மது நபியை புகழ்ந்து, ரைஸ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் டாக்டர். க்ரைக் கான்ஸ்டிடைன் (பார்க்க படம்) வெளியிட்ட வீடியோ, சமீபத்திய அமெரிக்க இனவெறி நிகழ்வுகளுக்கு பிறகு, அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுவருகிறது.

இன்றைய காலமே இனவெறி கொள்கைகளில் வேரூன்றி இருக்கும் போது, அன்றைய காலத்தில் இறுதித்தூதர் (அமைதி உண்டாவதாக) இனவெறியை ஒரு சமூக அவலமாக எப்படி அடையாளங்கண்டு அதனை வேரறுத்தார் என்பதை மிக எளிமையான ஆங்கிலத்தில், மிக பொறுமையாக விளக்குகிறார் க்ரைக்.


இனவெறி என்பது அறிகுறி மட்டுமே என்பதையும், அதன் உண்மையான நோய் மக்கள் மனங்களில் இருக்கும் ஆணவமே என்பதையும் மிக சரியாக கணித்து முஹம்மது நபி செயலாற்றியதாக குறிப்பிடுகிறார் க்ரைக். முக்கியமாக இனவெறியை வெறுப்பவராக மட்டும் இல்லாமல் அதற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு, தன் மக்களையும் செயல்பட வைத்த காரணத்திற்காக, நான் முஸ்லிம் இல்லை என்ற போதிலும் தன்னை மிகவும் கவர்ந்த நபராக முஹம்மது நபி இருப்பதாக அந்த காணொளியில் கூறுகிறார் க்ரைக்.

பல மொழி சப்டைட்டில்களுடன் சில நிமிடங்களே ஒடும் இந்த வீடியோ, Youtube-பில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. நிச்சயம் பார்த்து பகிர வேண்டிய காணொளி.

Post a Comment

0 Comments