ஜப்பானில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ”எவிகன்” என்ற மருந்தை இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருவதாக ”அருண” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக ஐயாயிரம் மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுவிட்டதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நாளை அங்கிருந்து இந்த மருந்துகள் அனுப்பப்படவுள்ளனவென்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவினாலும் இப்போது அது கட்டுக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழன் வெப்
0 Comments