மனைவி வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள போதிலும் தான் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றப்பபோவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உரிய விதிமுறைகைளையும் பரிந்துரைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நான் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலை தொடருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு எவ்வாறு நோய் பரவியது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நான் மேலும் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தலை தொடருவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து குணமடைந்துவிட்டதாக கனடா பிரதமரின் மனைவி சோபி கிராகோயர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எங்கள் மருத்துவதொழில்துறையினர் எனக்கு வைரஸ் பாதிப்பு நீங்கிவிட்டது என தெரிவித்துள்ளனர் நான் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் குணமடையவேண்டும் என வாழ்த்;து தெரிவித்த அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
வைரசினால் பாதிக்கபபட்டு துயரத்தில் உள்ளவர்களிற்கு எனது அன்பை தெரிவிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments